/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/எச்சரிக்கை மாம்பழத்தை கார்பைடு கல்லால் பழுக்க வைத்தால் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்புஎச்சரிக்கை மாம்பழத்தை கார்பைடு கல்லால் பழுக்க வைத்தால் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
எச்சரிக்கை மாம்பழத்தை கார்பைடு கல்லால் பழுக்க வைத்தால் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
எச்சரிக்கை மாம்பழத்தை கார்பைடு கல்லால் பழுக்க வைத்தால் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
எச்சரிக்கை மாம்பழத்தை கார்பைடு கல்லால் பழுக்க வைத்தால் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
திண்டுக்கல்: கார்பைடு கல்லால் மாம்பழத்தை பழுக்க வைப்பவர்களை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி, நத்தம், ஏ.வெள் ளோடு, பழநி, ஒட்டன்சத்திரம், வடமதுரை ஆகிய இடங்களில் மாந்தோப்புகள் உள்ளன.
இந்தாண்டு போதிய மழை இல்லாததாலும், பருவ நிலை மாற்றத்தாலும் விளைச் சல் கடுமையாக பாதிக்கப் பட்டுள் ளது. ஒரு சில இடங்களில் பூக்கள் பூத்திருந்த வேளையில், காலம் தவறி பெய்த மழையால் மாமரத்திலிருந்த பூக்கள் உதிர்ந்தன.குறைவான விளைச்சலே உள்ளதால் மாம்பழங்களுக்கு கடந்த ஆண்டை விட விலை அதிகமாக காணப்படுகிறது.தேவை அதிகமாக இருப்பதால் மாங்காயை கார்பைடு கல் வைத்து விரைவாக பழுக்க வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இது போன்ற முறையில் பழுக்க வைத்த பழங்களை வாங்கி சாப்பிட்டால் வயிற்று போக்கு,வயிற்றில் புண் போன்ற வை உண்டாகும்.கல் வகைகளை வைத்து மாம்பழங்களை பழுக்க வைக்க அரசு தடை விதித்திருந்தாலும், சிலர் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து அழிக்க பொதுசுகாதாரத்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படையினர் வட்டார சுகாதார ஆய்வாளர் கமாலுதீன் தலைமையில் சாணார்பட்டி, கோபால்பட்டியில் இரண்டு மாம்பழ குடோன்களில் சோதனை நடத்தினர். கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.